என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » டிமிட்ரி மெட்வேடேவ்
நீங்கள் தேடியது "டிமிட்ரி மெட்வேடேவ்"
அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று ரஷியா நாட்டின் பிரதமர் டிமிட்ரி மெட்வேடேவ்-ஐ சந்தித்து பேசினார். #ImranKhan #Medvedev
பீஜிங்:
பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் அந்நாடு ஏராளமான நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாக தெரிவித்தார். உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் சில நாடுகளிடம் இருந்து கடன் பெற்று, நலிவடைந்த பொருளாதார நிலையில் இருந்து நாட்டை முன்னேற்றுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
பாகிஸ்தானின் நிதி நிலவரங்களை ஆய்வு செய்ய சர்வதேச நிதியத்தின் உயரதிகாரிகள் குழு நவம்பர் 7-ம் தேதி இஸ்லாமாபாத் வருகிறது. இதுதவிர, அரசு தரப்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக இம்ரான் கான் சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றார். சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு நிதிச்சுமையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டுக்கு கடனுதவியாக 600 கோடி டாலர்களை அளிக்க சவுதி அரசு முன்வந்துள்ளது.
தற்போது சீனாவின் ஷங்காய் நகரில் சர்வதேச ஏற்றுமதி - இறக்குமதி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இதை காண்பதற்காக சீனா வந்துள்ள ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று சந்தித்துப் பேசினார். பாகிஸ்தானுக்கு வருமாறு டிமிட்ரி மெட்வெடேவுக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்தார். #ImranKhan #Medvedev

இதேபோல் நிதி திரட்டும் நோக்கத்துடன் 4 நாள் பயணமாக சீனாவுக்கு சென்ற இம்ரான் கான், சீன பிரதமர் லீ கெகியாங்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பாகிஸ்தானுக்கு சீனா 6 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.
தற்போது சீனாவின் ஷங்காய் நகரில் சர்வதேச ஏற்றுமதி - இறக்குமதி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இதை காண்பதற்காக சீனா வந்துள்ள ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று சந்தித்துப் பேசினார். பாகிஸ்தானுக்கு வருமாறு டிமிட்ரி மெட்வெடேவுக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்தார். #ImranKhan #Medvedev
×

X